யாழில் 10 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் கைது !

user 11-Feb-2025 இலங்கை 168 Views

யாழ்.(Jaffna) கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவனை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(10.02.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Post

பிரபலமான செய்தி