திருகோணமலை பகுதியில் இரு இளைஞர்களுக்கு நடந்தேறிய துயர சம்பவத்தால் பரபரப்பு

user 14-Apr-2026 இலங்கை 27 Views

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) மாலை மோட்டார் சைக்கிள் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில்  24,25 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தோர் இருவரும் திரியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி