அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை பார்வையிட்ட அமைச்சர் குழாம் !

user 07-Mar-2025 இலங்கை 66 Views

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  பார்வையிட்டுள்ளார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த இடத்திற்கு இன்று(07) அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அச்சுவேலியில் இயங்கி வரும் மரக்கறி எண்ணைய் உற்பத்தி செய்யும் நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அனைத்து கைத்தொழில் நிலையங்களையும் மேம்படுத்தி அவற்றின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் குறித்த களப்பணி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரிய பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், கோப்பாய் பிரதேச செயலர் சிவஸ்ரீ உள்ளடோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post

பிரபலமான செய்தி