றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதிய தலைவர் தெரிவு !

user 13-Feb-2025 விளையாட்டு 175 Views

இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதார் (Rajat Patidar)  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் ( Andy Flower) ஆகியோர் இன்று (14) உத்தியோக பூர்வமாக இதனை அறிவித்துள்ளனர். 

2022 முதல் 2024 வரை அணியின் தலைவராக செயற்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸை பெங்களூரு அணி கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் தக்கவைக்கத் தவறியது.

இதனால், முன்னாள் தலைவர் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்துவார் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வந்துள்ளது.

2021 முதல் றோயல் செலஞ்சர்ஸ் உடன் இருக்கும் படிதார், ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் 8 ஆவது தலைவராவார்.

31 வயதான படிதார் 2024 சீசனில் பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் அடங்கலாக 395 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில்,  ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி