பிரதமரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி !

user 08-Mar-2025 இலங்கை 43 Views

சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள் மற்றும் தலைமைத்துவம் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் போன்றவை பெண்களைப் பொருத்தமற்ற வகையில் பாதிக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம் இதுவாகும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஜனநாயக சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில், எமது சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினரான பெண்களை நாம் தள்ளிவைக்க முடியாது.

இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள் மற்றும் தலைமைத்துவம் அவசியமாகும். 

 

Related Post

பிரபலமான செய்தி