காதலர் தினத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு !

user 15-Feb-2025 இந்தியா 115 Views

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம், குர்ரம்கொண்டா பகுதியில் 23 வயதான யுவதி மீது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியும், ஆசிட்டை முகத்தில் வீசியும்  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தினால் அப்பெண்ணின் முகம்,வாய்,கழுத்து பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து குறித்த யுவதி உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்  மதனப்பள்ளியைச் சேர்ந்த கணேஷ் எனத்  தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதிக்கு  எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 29 திகதி திருமணம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் அரகேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும்  ஏதேனும் காதல் பிரச்னையாக இருக்குமா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காதலர் தினமான இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Post

பிரபலமான செய்தி