யாழ். பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள்

user 02-Jun-2025 இலங்கை 191 Views

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

 

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவிற்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த அருட்கலாநிதி தாவீது அடிகளாருக்கும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் நூலக ஊழியர்கள், வாசகர்கள் ,பொதுமக்கள்ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி சிங்கள குழுவால் தீயூட்டப்பட்டது.

 

நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

Related Post

பிரபலமான செய்தி