விளையாட்டு வினையானது கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்...

user 18-Jun-2025 இலங்கை 59 Views

 யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது இருந்து விளையாடியுள்ளார்.

இதன்போது வலை அறுந்து சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Related Post

பிரபலமான செய்தி