2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

user 06-Jan-2026 இலங்கை 52 Views

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியது.

இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், மீனவர் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட பிரகடனம் தொடர்பான பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து, முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையும் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி