அக்கரப்பத்தனையில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த நபர் கைது !

user 02-Jan-2025 இலங்கை 503 Views

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது 11 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை சுமார் 2 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உதவி தோட்ட அதிகாரி சந்தேகத்தின் பேரில் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அகரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளையும் இன்று (02) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி