புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து மூவர் பலி...பலர் காயம்

user 12-Jan-2026 இலங்கை 32 Views

 புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி