போராட்டமாகவும் அரசியலாகவும் மாறிக்கொண்டிருக்கும் மன்னார் மாவட்டத்தின் மெகா காற்றாலை செயற்றிட்டம் தொடர்பான ஓர் விஞ்ஞான நோக்கு!

user 01-Oct-2025 இலங்கை 71 Views

NREL எனும் நிறுவனம் இலங்கையின் காற்று வழி தொடர்பான தீர்மானமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன்இ இவ் ஆய்வுகள் மற்றும் காற்று வழி இப் பெருஞ் செயற்றிட்டத்திற்கான அடித்தளங்கள் ஆகும். ஐக்கிய இராஜ்ஜியத்தின் தேசிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆய்வகம் (NREL) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, இலங்கையின் அதிக மற்றும் நிலையான காற்று வளம் கொண்ட பிரதேசங்கள் 2003 ஆம் ஆண்டு இனங்காணப்பட்டன

ஆய்வுகளின் அடிப்படையில் நாட்டின் பிரதானமான காற்று வழியாக கொள்ளப்படும் பிரிவுகள் இரண்டு மாத்திரமே காணப்படுகின்றது. 


வடக்கு – மேல் வழி : புத்தளம் (கற்;பிட்டி), மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்     உட்பட்ட பிரதேசங்கள்
தெற்கு வழி : அம்பாந்தோட்டை உட்பட்ட தெற்கு கரையோர பகுதிகள

மலைநாட்டு பகுதிகள் தவிர்த்து, இப் பிரதேசங்கள் காற்று உற்பத்திக்காக மிக பொருத்தமான இடமாக இனங்காணப்பட்டுள்ளன. 
மன்னாரை ஏன் தெரிவு செய்தீர்கள்? எனும் கேள்வி எழுப்பப்படுகிறது.


இக் காற்று வீச்சுள்ள பிரதேசங்களுள் மன்னார் மாவட்டம் அதன் புவியியல் அமைப்பின் காரணமாக மிக முக்கியமான தெரிவாக தோற்றம் பெற்றது. மற்றும்:
நிலையான மற்றும் வேகமான காற்றுவீச்சு: வடகிழக்கு மற்றும் ஈசான திசை ஊடாக வருடாந்தம் தொடர்ந்து வேகமான காற்றிற்கான வழியமைக்கும்.
மேலதிக திறன் : அதிக காற்று வீச்சின் வேகம் டர்பயின் முடிந்தளவு வேகமாக செயற்படுவதற்கு இடமளிப்பதோடு அதிக இலாபம் பெறவும் வழியமைக்கும். 
அடிப்படை வசதிகள் : தள பிணைய இணைப்புக்காக இடம்பெறும் நன்மை விளைவிக்கக் கூடிய நிபந்தனைகள் மற்றும் பாரிய அளவிலான காற்றாலை நிர்மாணிப்பதற்கு போதியளவிலான இடமாக மன்னாரை முன்னோடித் தெரிவு செய்யப்பட்டள்ளது.

தேசிய இலக்கிற்கான பங்களிப்பு
இச் செயற்றிட்டம் இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பிற்கு மேலதிகமாக பிரதான இலாப நோக்குகளையும் வழங்குகின்றது அவற்றுள்,

*  70 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நோக்கு. 2030 ஆம் ஆணடளவில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் ஊடாக நாட்டின் மின்சாரத் தேவை நூற்றுக்கு 70 தீர்ப்பதற்கான தேசிய நோக்கினை நிறைவேற்றுவதற்காக மன்னார் போன்ற பாரிய அளவிலான செயற்றிட்டங்கள் அத்தியவசியமானது ஆகும்.

* பொருளாதார சேமிப்பு : நிலக்கரி மற்றும் டீசல் இறக்குமதியினை குறைப்பதனால் அந்நிய செலாவணியினை பெருமளவு சேமிக்கப்படும் என்பதோடு மின்சார கட்டணங்களும் குறைக்கப்படும் என அரச அபிவிருத்தி நிறுவனம் நம்புகிறது

அது மட்டுமன்றி, பூகோள ரீதியாக, காற்று மின்சக்தி உற்பத்தி இன்று பூகோள மின்சக்தி இடமாற்றத்தின் பிரதான தூண் ஆகும். சீனா, ஐக்கிய அமேரிக்க இராஜ்ஜியம் மற்றும் ஜேர்மனி போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் காற்றாலையின் ஊடாக அவர்களது தேசிய மின்சக்தி தேவைப்பாட்டினை பெருமளவு றிறைவேற்றிக்கொள்கின்றன. விசேடமாக, புதைபடிவ எரிபொருட்களை நிரந்தரமபக நீக்குவதனை இலக்காகக் கொண்டு ஐரோப்பாவின் பாரிய கடலோர காற்றாலைகளை அமைத்துள்ளன.

இவ் உலகளாவிய போக்கினை அடிப்படையாகக் கொண்டு, மன்னார் போன்ற செயற்றிட்டம் இலங்கைக்கு சுயாதீனத்தன்மையை பெறுவதற்கு மற்றும் காலனிலை மாற்றத்தின் சவால்களை எதிர்நோக்குவதற்கு உதவும். தேசிய முன்னேற்றத்திற்காக அனைத்து சாராரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு காலம் வந்துள்ளதாக பல சுற்றுப்புறவியலாளர்கள் நம்புகின்றனர்.


தீவுகளில் இவ்வாறான காற்றாலைகளை நிறுவுவதனால் சில நேரங்களில் பறவைகள் டர்பைனர்களில் மோதுண்டு இறப்பதற்கான காரணமாக அமையும். மேலும் நிர்மாணிப்பின் போது ஏற்படும் ஒலியினாலும் கடலுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் கேபலினாலும் கடல்வாழ் உயிரனங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். தேசிய சுற்றுப்புற சூழலின் பாதிப்பை ஏற்படுத்துவதொடு, அதற்கப்பாற்பட்ட சூழற் தாக்கங்களுக்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லை.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தியினை நோக்காகக் கொண்ட பாரிய அளவிலான காற்றுச் செயற்றிட்டங்களுடன் மேலும் முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் அல்லது செயற்றிட்டங்களின் நிரந்தர தகவல்கள் இல்லை.

மேலும் இக்காற்றாலை செய்ற்றிட்டங்கள் விடுதிப் பிரதேசங்கள் பாதுகாப்பான தூரத்தில் செயற்படுமாயின், அதனை எதிர்ப்பதனை விட நேர்மறையாக சிந்திப்பது சிறந்ததோடு, மின்சாரத்திற்கான தேவைப்பாடு அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் இலங்கை போன்ற நாடுகளுக்கு இக் காற்றாலை உற்பத்தி செயற்பாடு அத்தியவசியமானதாகும்.

மேலும் இச்செயற்றிட்டமானது தற்போது கட்டங்களாக நிர்மாணிக்கப்படுவதுடன், ஆய்வின் ரீதியாக, இலங்கையின் ஏனைய காற்றாலைகளை அமைப்பதற்கு முடியுமானதாக இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.  

Related Post

பிரபலமான செய்தி