15 ஆண்டுகளுக்கு NPP அரசை அசைக்க முடியாது

user 25-Jan-2026 இலங்கை 35 Views

  அடுத்த 15 வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமில்லை. நாம் மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி செயல்பட்டுவருகின்றோம்.

எனவே, எமது ஆட்சி தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். நவீன உலகை வெல்ல வேண்டுமெனில் கல்வி மறுசீரமைப்பு அவசியம்.

அதனை செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. எனினும், கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மறுசீரமைப்பையும் குழப்புவதற்கு முற்படுகின்றதாகவும் அமைச்சர், ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி