யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியை தடுக்கும் தமிழ் பிழைகள்

user 17-Dec-2025 இலங்கை 41 Views

பல தொன்மையான விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் யாழ்ப்பாண மாநகரம் அதில் அதில் காணப்படும் பழைய பூங்கா பிரித்தானிய காலத்தில் அமைக்கப்பட்ட பிரித்தானிய அரசாங்க அதிபரின் வாழி இடமாக இருந்தாலும் அந்த கட்டிடம் 19ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும்.இது மாளிகையுடன் பூங்காவையையும் சேர்த்து  அமைக்கப்பட்டுள்ளது .தற்போது அது பூங்காவாக  இருந்தாலும் கூட இவ்விடம் பொது மக்களால் அதிகமாக பயன்படுத்தபடுவதில்லை.அந்தவகையிலயே விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கா பகுதியில்   அடிக்கல் நாட்டும் நிகழ்வு           23ம் திகதி நவம்பர் 2025 இடம்பெற்றது. இந்தக உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதனால் ஏற்படுகின்ற நன்மைகளை அவதானிக்கின்ற போது,

யாழ்ப்பாண மாவட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய  பயிற்சி கிடைக்கும்.

மழை,வெயில் போன்ற காலநிலை பாதிப்புக்கள் இல்லாமல் பயிற்சிகளை மேற்க்கொள்ள  முடியும்.

தேசிய மற்றும் தெற்காசிய மட்ட விளையாட்டு போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

புதிய திறமையான வீரர்களை கண்டறியவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இளைஞர்களை  போதைப்பொருள் சமூக தீமைகளிலிருந்து விலக்கி நல்ல ஒழுக்கமும் நல் வாழ்வையும் உருவாக்குதல்

விளையாட்டு நிகழ்வுகள் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா ஊக்கமடையும்.

வடக்கு மாகாணத்தில் விளையாட்டு கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும்.

இவ்வளவு நன்மைகளை இந்த உள்ளக விளையாட்டு அரங்கினால்  கிடைக்கும் என்றாலும் கூட சில முற்போக்கு இல்லாத படித்த புத்தி ஜீவிகளான தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் மற்றும்  சட்டத்தரணி சுமந்திரன்   சில சிவில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்டுலதோடு  இந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிளான  இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும். பழைய மரபுகளை வைத்துக் கொண்டு எந்த நன்மையும் யாருக்கும் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கு எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு  தீர்மானங்களை எடுக்கின்ற போது அது ஆரோக்கிய சமூகம்  உருவாக வித்திடும்.

Related Post

பிரபலமான செய்தி