Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இலங்கையின் மிக உயரமான இயேசு கிறிஸ்து சொரூபம் திறந்து வைப்பு

31 Jul 2026, 02:39 PM
பார்வைகள்: 115
இலங்கையின் மிக உயரமான இயேசு கிறிஸ்து சொரூபம் திறந்து வைப்பு

இலங்கையிலேயே மிக உயரமான 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்று (30) ஆசீர்வதிக்கப்பட்டு, முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு சீதுவை பகுதியில் அமைந்துள்ள 'சுபுவன் அரண' வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சொரூபம், திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் திறந்து விடப்பட்டது.

60 அடி உயரமுடைய இந்த இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வெண் இரும்பினால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 'சுபுவன் அரண' நிர்வாகியான அருட்தந்தை டாரெலின் கலைக் கோட்பாட்டிற்கு அமைவாக உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான கத்தோலிக்க பக்தர்கள் கலந்துகொண்டதுடன், பௌத்த மதகுருமார்களும் பங்கேற்று மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினர்.