Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஹட்டன் ஓயா பெருக்கெடுப்பு: பிலிஹத்தர பகுதியில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின; மக்கள் பாதிப்பு!

10 Nov 2026, 02:39 PM
பார்வைகள்: 16
ஹட்டன் ஓயா பெருக்கெடுப்பு: பிலிஹத்தர பகுதியில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின; மக்கள் பாதிப்பு!

ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, ஹட்டன் – பிலிஹத்தர பகுதியில் சுமார் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் குறித்த வீடுகளுக்குள் 3 முதல் 4 அடி உயரம் வரை மழைநீருடன் சேறும் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் வசித்து வந்த மக்களை, அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் வடிந்தோடும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையே கால்வாய் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினை காரணமாகத் தமது வீடுகள் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டிலிருந்த தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பெறுமதியான உடைமைகள் பலவும் சேதமடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் விரைந்து தீர்வு வழங்கி, எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.