Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கொட்டகலை, கினிஹேத்தனை உள்ளிட்ட பகுதிகளில் களமிறங்கிய இராணுவம்

04 Aug 2026, 12:16 PM
பார்வைகள்: 140
கொட்டகலை, கினிஹேத்தனை உள்ளிட்ட பகுதிகளில் களமிறங்கிய இராணுவம்

நிலவி வரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள கொட்டகலை, கினிஹேத்தனை உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்க இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல், அவசர உதவிகளை வழங்குதல், வீதிகளில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட தொகுப்பு (Gallery)