Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பல மாவட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

16 Jun 2026, 10:27 AM
பார்வைகள்: 160
பல மாவட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

தங்கச் சங்கிலி கொள்ளை மற்றும் சொத்துத் திருட்டு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 10ஆம் திகதி கட்டுவெல்லேகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 06 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 39 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக இன்று (16) வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.விசாரணைகளின் போது, பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, பாதுகா, கட்டுநாயக்க, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல மற்றும் மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தங்கச் சங்கிலி கொள்ளைகள் மற்றும் சொத்துத் திருட்டுச் சம்பவங்களுடன் அவர் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளிலிருந்து உருக்கப்பட்ட 09 தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.