Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

07 Sep 2026, 11:20 AM
பார்வைகள்: 159
பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் நடவடிக்கைகள் இன்று (08) ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி, இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரீட்சை டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.