Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் துரிதம்

08 Sep 2026, 11:31 AM
பார்வைகள்: 225
யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் துரிதம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன், குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, கந்தரோடை குளம், அராலி பாலத்துக்கு அண்மையிலுள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்குவதற்கான செயற்றிட்டம், கற்குளம் மற்றும் அல்லைப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கப்பெறும் நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எல் நினோ தாக்கம் காரணமாக இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே குளங்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.