Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

பேராதனை பல்கலைக்கழக விடுதியில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில்

12 Sep 2026, 11:50 AM
பார்வைகள்: 148
பேராதனை பல்கலைக்கழக விடுதியில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த மாணவர் கலைப் பீடத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் ஆரம்பத்தில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவர் கீழே விழுந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பல்கலைக்கழகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.