Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக யானை ஒன்று முழந்தாளிட்டு வணங்கிய காட்சி..

15 Sep 2026, 12:25 PM
பார்வைகள்: 104
களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக யானை ஒன்று முழந்தாளிட்டு வணங்கிய காட்சி..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக யானை ஒன்று முழந்தாளிட்டு வணங்கிய காட்சி பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி தினம் இந்து சமயத்தினரால் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆலயங்களில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலய வீதியில் விநாயகப் பெருமானின் திருவுருவத்திற்கு முன்னால் யானை ஒன்று முழந்தாளிட்டு, தனது தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யானை விநாயகப் பெருமானை வணங்குவது போன்ற இந்தக் காட்சி, அங்கு கூடியிருந்த பக்தர்களால் ஆர்வத்துடன் அவதானிக்கப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஆலயத் திருவிழாக்கள் இறை அருளைப் பெற்று மன அமைதியை நாடும் ஆன்மிக நிகழ்வுகளாக இந்து சமயத்தினரால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.