Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

16 Jun 2026, 02:02 PM
பார்வைகள்: 156
சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை நேற்று (15) கொழும்பில் அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.இந்த சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றது.இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவை பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டினார்.மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மேற்கொண்டு வரும் மூலோபாய மாற்றம் மற்றும் நாட்டின் நடுநிலையான அணிசேரா வெளியுறவு கொள்கை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.போதைப்பொருள், ஆயுத மற்றும் மனிதக் கடத்தலை தடுக்கும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க (simulation) திட்டங்கள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகள் எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளாக இருதரப்பினராலும் அடையாளம் காணப்பட்டன.இந்த சந்திப்பில் சீன தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகரும் கலந்து கொண்டனர்.