Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு – தாயார் படுகாயம்

06 Oct 2026, 10:20 AM
பார்வைகள்: 101
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு – தாயார் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இளம் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரொருவர், வீட்டில் இருந்த இளம் யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, யுவதியின் தாயாரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.