Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

“என் நிறம்தான் என் அடையாளம்” – உருவக் கேலி விமர்சனங்களுக்கு அட்லீ பதிலடி

06 Oct 2026, 10:49 AM
பார்வைகள்: 1,084
“என் நிறம்தான் என் அடையாளம்” – உருவக் கேலி விமர்சனங்களுக்கு அட்லீ பதிலடி

தனது தோற்றம் மற்றும் நிறம் தொடர்பில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காட்டமாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அட்லீ, தனது நிறம் குறித்து தான் எந்தவித தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆம், நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகக் கூறவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சிப்பவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். இதுதான் என்னுடைய நிறம்; இதுதான் என்னுடைய அடையாளம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கடினமான காலகட்டங்களில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனக்கு வழங்கிய ஆதரவையும் அட்லீ நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

உண்மையான நட்பும் ஆதரவும் ஒருவரின் தோற்றம் அல்லது நிறத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீயின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.