Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்; வளர்ப்புச் செலவுக்கு நஷ்டஈடு கோரி தந்தை வழக்குத் தாக்கல்!

05 Nov 2026, 10:16 AM
பார்வைகள்: 41
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்; வளர்ப்புச் செலவுக்கு நஷ்டஈடு கோரி தந்தை வழக்குத் தாக்கல்!

காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய தனது மகளுக்கு எதிராக, அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மகளை 18 வயது வரை வளர்ப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் தந்தை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு மகளின் தாயும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெற்றோர் இருவரும் முன்வைத்துள்ள இந்த நஷ்டஈடு கோரிக்கையால், காதலனும் காதலியும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.