Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது

07 Oct 2026, 10:02 AM
பார்வைகள்: 115
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (07) கைது செய்துள்ளனர்.

நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், அங்கு வைத்து அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.