Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்திற்குத் தெரிவான பாரதி மகா வித்தியாலயத்தின் மூன்று மாணவிகள்!

13 Oct 2026, 09:57 AM
பார்வைகள்: 248
65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்திற்குத் தெரிவான பாரதி மகா வித்தியாலயத்தின் மூன்று மாணவிகள்!

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள், கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

பாடசாலையின் 65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூன்று மாணவிகள் ஒரே தடவையில் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மேலும், மூதூர் கல்வி வலயத்திலிருந்து அதிகளவான மாணவர்களை தேசிய மட்டத்திற்குத் தெரிவுசெய்த பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தகுதிபெற்ற ஒரே பாடசாலையாகவும் பாரதி மகா வித்தியாலயம் திகழ்கின்றது.

தேசிய மட்டத்திற்குத் தெரிவான மாணவிகளான செல்வி M. கிஷானிக்கா, செல்வி P. பிரத்திசா மற்றும் செல்வி A. கஜித்தனா ஆகியோர் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாணவிகளுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர் செ. உதயன், உதவிகளை வழங்கிய ஆசிரியை திருமதி ஜீனத் ஷகீலா மற்றும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் பு. ஜெயகாந்தன் ஆகியோருக்கும் பாடசாலைச் சமூகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

பாடசாலையின் 65 ஆண்டுகால வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்துள்ள இம்மாணவிகளின் சாதனை, பாடசாலைச் சமூகத்திற்கும் மூதூர் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.