Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அஸ்வெசும நிதியுதவிகள் இன்று முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்!

14 Oct 2026, 09:49 AM
பார்வைகள்: 219
அஸ்வெசும நிதியுதவிகள் இன்று  முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்!

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற பயனாளர்களுக்கான நிதியுதவிகள் (14)இன்று    வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும நலத்திட்ட உதவிகளுக்காக 2 பில்லியன் 41 மில்லியன் 711 ஆயிரத்து 250 ரூபாய் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும நலத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 2026 ஒக்டோபர் மாதத்திற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 985,283 பயனாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மொத்தம் 9 பில்லியன் 123 மில்லியன் 802 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவிகளையும் இன்று   (14) முதல் பயனாளர்கள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் நிதியுதவிக்குத் தகுதிபெற்றுள்ள பயனாளர்கள் நாளை முதல் தங்களது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து, நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.