Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

09 Nov 2026, 12:04 PM
பார்வைகள்: 27
மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.

இதன்படி, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உருவாக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வழமைபோன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள், ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.