Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சிறுமிகள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தந்தை நஞ்சருந்தி உயிரிழப்பு

19 Jun 2026, 12:04 PM
பார்வைகள்: 366
சிறுமிகள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தந்தை நஞ்சருந்தி உயிரிழப்பு

Kattankudy பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் விசாரணைகளின் படி, சந்தேகநபர் சில வாரங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்றபோது, பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அங்கு இருந்த 10 வயது சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இந்த விவகாரம் பாடசாலை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், தனது மகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் துயர சம்பவத்தை தாங்க முடியாமல் 12 வயது சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: கைது செய்யப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.