Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து: 13 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

23 Jun 2026, 02:27 PM
பார்வைகள்: 386
கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து: 13 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் உள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதுடன், 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மூடப்பட்டிருந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தத்துடன் ஆலை முழுவதும் தீப்பற்றியதால் பணியாளர்கள் சிக்கியுள்ளனர்.விபத்து ஏற்பட்ட உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளன. தற்போது தீ கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், காணாமல் போன தொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின் படி தொழில்நுட்ப கோளாறு அல்லது பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.