Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை – நான்கு மாவட்டங்களுக்கு NBRO அறிவிப்பு

12 Jun 2026, 01:26 PM
பார்வைகள்: 379
மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை – நான்கு மாவட்டங்களுக்கு NBRO அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக, களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று (12) அதிகாலை 4.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 4.00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள் நிற) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


📍 எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்

🔴 இரத்தினபுரி மாவட்டம்

பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடகவெல, கலவானை, நிவித்திகலை

🔴 களுத்துறை மாவட்டம்

பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவு

🔴 கண்டி மாவட்டம்

தொழுவை பிரதேச செயலகப் பிரிவு

🔴 நுவரெலியா மாவட்டம்

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு


⚠️ பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்

மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிலத்தில் திடீர் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், ஊற்றுகள் திடீரென தோன்றுதல் அல்லது வற்றிப்போதல் போன்ற மண்சரிவு ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.