Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்

07 Jul 2026, 12:05 PM
பார்வைகள்: 119
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மோதலில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும், காயமடைந்த 58 பேர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தச் சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறைச்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.