Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மஸ்கெலியாவில் சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

09 Jul 2026, 11:27 AM
பார்வைகள்: 362
மஸ்கெலியாவில் சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டம், பிரேமா பிரிவில் சாலையோரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாலையோரத்தில் நபர் ஒருவர் அசைவின்றி கிடப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் மஸ்கெலியா பேருந்து நிலைய வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய பரமேஸ்வரன் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.

பின்னர், ஹட்டன் நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.