ஈரானின் அணுஆயுத தளத்தை தாக்கி அழித்த இஸ்ரேல்!

user 17-Nov-2024 சர்வதேசம் 153 Views

ஈரானில் உள்ள இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளமானது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில்(Parchin Military Complex nuclear weapons research site) உள்ள டேல்கான் ஆராய்ச்சி கூடத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஈரான் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்து வந்தது.

ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி