ஸ்டார்மரின் அதிரடி முடிவு !

user 25-Feb-2025 சர்வதேசம் 110 Views

பிரித்தானிய (UK) அரசாங்கம், ரஷ்யா (Russia) மற்றும் வட கொரியா (North Korea) ஆகிய நாடுகளுக்கு எதிராக 107 புதிய தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய தடைகள் அறிவிப்பிற்கு பின்னரே பிரித்தானியா இந்த தடை அறிவிப்பை விடுத்துள்ளது. 

குறித்த தடைகள் ரஷ்யாவின் போர்க்கலன் தயாரிப்பு சங்கிலிகள், புடினின் போரை நிதியளிக்கின்ற வருவாய் நிலைகள் மற்றும் கிரெம்லினுக்கு ஆதாயம் தேடும் தனியார் நபர்கள் ஆகியோருக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.  

இதனடிப்படையில், குறிப்பிட்ட மூன்று தரப்புக்களை தமது முக்கிய இலக்குகளாக பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதில் ரஷ்ய இராணுவத்திற்கான இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அடங்கும் அதேவேளை, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் நோ க்வாங் சோல் (No Kwang Chol) மற்றும் 11,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்ப உதவிய அதிகாரிகள் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மேலும், LLC Grant-Trade நிறுவனர் Marat Mustafaev மற்றும் அவரது சகோதரி Dinara Mustafaeva ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், உயர்தர ஐரோப்பிய தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு கடத்தியதாக பிரித்தானியா அவர்கள் மீது பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது.

அது மாத்திரமன்றி, 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, பிரித்தானியா மொத்தம் 2,000 தடைகளை நடைமுறைபடுத்தியுள்ளது.

அத்துடன், இதன்மூலம் தடைக்குள்ளானவர்கள் பிரித்தானியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கவும், வர்த்தகம் செய்யவும், நாட்டிற்குள் நுழையவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Related Post

பிரபலமான செய்தி