ரஷ்யாவுடனான முறுகல் நிலையைத் தொடர்ந்து அப்காசியா ஜனாதிபதி அஸ்லான் பிஜானியா (Aslan Bzhania) பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டுடனான முதலீட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்காசியா நாட்டில் உள்ள ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு, 8 ஆண்டுகள் வரி மற்றும் சுங்க வரி விலக்கு உட்பட பல்வேறு நன்மைகளை வழங்கும் ரஷ்ய - அப்காசியன் முதலீட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
ஆனால், உள்ளூர் நாடாளுமன்றத்தில் இதனை அங்கீகரிக்கக் கூடாது என சமீபத்திய நாட்களில் எதிர்ப்புகள் கிளம்பியதால் ரஷ்யாவுடனான இந்த முதலீட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து, பிராந்திய நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், "நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி நிர்வாக கட்டிடத்திற்கு அருகில் உள்ள வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும்.
அத்தோடு, எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினால் தான் பதவி விலக தயார்" எனவும் அப்காசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.