திடீரென காணாமல் போன புடின் !

user 21-Nov-2024 சர்வதேசம் 251 Views

கடந்த 12 நாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எந்தவொரு பொதுவெளியிலும் தென்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் 07ஆம் திகதி அன்று ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்பை, புடின் வாழ்த்தியிருந்தார்.

அதன் பின்னர், புடின் எந்தவொரு பொதுவெளியிலும் தென்படவில்லை.

இந்நிலையில், அவரின் உடல் நலம் மோசமடைந்துள்ளதா அல்லது தனது ஹைடெக் பதுங்கு குழிக்குள் மறைந்திருக்கிறாரா அல்லது மீண்டும் ஒரு அழகியல் சிகிச்சைக்காக சென்றுள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, விளாடிமீர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனால், அமைதியாக யார் கண்ணிலும் படாமல் இருக்க முடிவு செய்துள்ளார் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி