இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட இலங்கை !

user 18-Nov-2024 விளையாட்டு 259 Views

சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் (New Zealand)  இலங்கை அணிக்கும் (Sri Lanka ) இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி டக்வேத் லூயிஸ் அடிப்படையில் 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நேற்று (17) கண்டி பல்லேகலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. மார்க் சப்மன் 76 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 46 ஓவர்களில் 7 விக்கட்டுக்களின் இழப்புக்கு 210 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதில், குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் மூன்று போட்டிகளை கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.  

Related Post

பிரபலமான செய்தி