விருப்பு வாக்கு விவகாரத்தில் சந்தேகம் !

user 19-Nov-2024 இலங்கை 1288 Views

களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணும் தீர்மானத்தை எடுக்க உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரோஹித அபேகுணவர்தனவை விட தாம் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், பொதுத் தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு விவகாரம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அரசியல் வட்டார தகவல்களின் அடிப்படையில், ராஜித சேனாரத்ன களுத்துறை மாவட்டத்தில் தனது கட்சி ஆதரவாளர்கள் 8000 பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும், வேலை வழங்கியவர்கள் கூட அவருக்கு இந்த பொதுத் தேர்தலில் முன்னுரிமை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Post

பிரபலமான செய்தி