பணிப்புறக்கணிப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை...

user 06-Aug-2025 இலங்கை 154 Views

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நாடு தழுவிய பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இந்த பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை எடுத்துள்ளது.

மருத்துவர்களின் இடமாற்ற விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறினால் நாடு தழுவிய அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் ஹன்சாமல் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி காலை 8 மணியளவில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி