இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்ரேல் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு !

user 04-Dec-2024 சர்வதேசம் 1057 Views

இஸ்ரேலில் (Israel) உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த உத்தரவை அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் (Itamar Ben Gvir) பிறப்பித்துள்ளார்.

அத்தோடு, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இதாமர் பென் க்விர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இதாமர் பென் க்விர் மேலும் தெரிவிக்கையில், “பள்ளிவாசல்களிலிருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விடயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” என தெரிவித்துள்ளார்.

 

 

Related Post

பிரபலமான செய்தி