பற்று அட்டை (Debit Card) அல்லது கடன் அட்டைகளை (Credit Cards) பயன்படுத்தி மேற் கொள்ளப்படும் கொள்வனவு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5% போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வர்த்தகர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
அட்டை கட்டண இயந்திரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக வர்த்தகர்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் கீழ், வாடிக்கையாளருக்கு கூடுதல்
கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படக்கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட விலையை விட வர்த்தகர் மேலதிகமாகக் கேட்டால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தமது அட்டை வழங்கும் வங்கிக்கு அறிவிக்க முடியும்