யாழில் அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய ஜனாதிபதி !

user 31-Jan-2025 இலங்கை 206 Views

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் அவரது உரையை மறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார். 

வடக்கு - கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது,  அவர்களின் தகைமை  அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். அநேகமாக சிங்களவர்களே  நியமிக்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். 

சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராக  இருந்துதான் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மேலும் வடக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலை பிரச்சினை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிக நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, இடைமறித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார். 

இதன்போது, அர்ச்சுனாவின் உரை இடைமறிக்கப்பட்ட நிலையில், சபையில் சிறு நகையொலியுடன் சலசலப்பு ஏற்பட்டது. 

Related Post

பிரபலமான செய்தி