உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி !

user 04-Mar-2025 இந்தியா 73 Views

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) காலை குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றுள்ளார்.

இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிரில் ஒரு சஃபாரிக்குச் சென்றேன், இது நாம் அனைவரும் அறிந்தபடி, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது மோடி, அவற்றின் வசீகரிக்கும் அழகினை கையில் இருந்த கமரா மூலம் புகைப்படம் எடுத்தார்.

இந்த பயணித்தின் போது, ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண்களின் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

Related Post

பிரபலமான செய்தி