யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்த போராட்டம் !

user 31-Dec-2024 இலங்கை 990 Views

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் (Jaffna) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீதி கோரி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது,ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

மேலும், யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி