யாழ் சிறைச்சாலையில் பெண் உட்பட 17 கைதிகள் விடுதலை !

user 05-Feb-2025 இலங்கை 185 Views

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு நேற்று  (4.1.2025) யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

77 ஆவது சுதந்திர தினமான  நேற்று  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இரத்ததானம் நடைபெற்றுள்ளது.

இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் என பல குருதிக் கொடையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post

பிரபலமான செய்தி