ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

user 28-Jan-2025 இலங்கை 163 Views

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரியவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் (27) பிரதமர் அலுவலகத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமநிலை ஆகியவை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமை திட்டங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலிற்கான முயற்சிகள் மற்றும் “க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சி திட்டம் பற்றிய கருத்து பரிமாற்றமும் தேசிய முன்னேற்றத்திற்கான வழிநடத்தல்களின் போது சமூக பொறுப்புகள் மற்றும் அனைத்தும் உள்ளடங்களாக நிர்வாகம் செய்வதின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பிற்கு இலங்கைக்கான பிரித்தானின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதன்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் தமித்ரி சங்கிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Post

பிரபலமான செய்தி