வகுப்பை தவிர்த்தால் விசாவை இழப்பீர் அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

user 28-May-2025 இலங்கை 188 Views

வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

அத்தோடு எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில், ‘நீங்கள் கல்லூரியை விட்டு வெளியேறினால், வகுப்புகளைத் தவிர்த்தால், கல்லூரிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியே சென்றால் உங்களின் மாணவர் விசா இரத்து செய்யப்படும்.

மேலும், எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்கள் பெறுவதற்கான தகுதிகளையும் அவர்கள் இழக்க நேரிடும். அதனால், பிரச்சினைகளைத் தவிர்க்க எப்போதும் உங்களுக்கான விசா விதிமுறைகளை கடைபிடித்து, மாணவர் நிலையை பராமரிக்கவும்’ என்று தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், அமெரிக்க அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், விசாக்களை இரத்து செய்வதன் மூலம் சர்வதேச மாணவர்கள் மீதான தங்களின் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பலஸ்தீன ஆதரவு போராட்டம் முதல் போக்குவரத்து விதிமீறல் என ஒவ்வொரு காரணமும் வேறுபடுகின்றன.

இவை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Related Post

பிரபலமான செய்தி